நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் மாறி மாறி தாக்கிக்கொண்ட உக்ரைன், ரஷ்யா

15 பங்குனி 2025 சனி 13:27 | பார்வைகள் : 513
ஒரே இரவில் ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி ட்ரோன்களால் தாக்கிக்கொண்டன.
சனிக்கிழமை இரவு உக்ரைன் மீது 130 ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது. நாடு முழுவதும் இந்த ட்ரோன்கள் தாக்கியுள்ளன.
ஆனால் அவற்றை சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கீவ் விமானப்படை, 14 பிராந்தியங்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட Shahed ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஒருநாள் முன்பாக ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான Kryvy Rig மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.
மத்திய உக்ரேனிய நகரத்தின் குடியிருப்புப் பகுதியையும் ரஷ்யா தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், 10 தனி வீடுகள் பலத்த சேதமடைந்ததாக Dnipropetrovsk பிராந்திய தலைவர் Serhiy Lysak தெரிவித்தார்.
உக்ரைன் 126 ட்ரோன்களைக் கொண்டு தாக்கியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை Volgograd மற்றும் Voronezh பிராந்தியங்களை குறி வைத்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும் ஒரே இரவில் அந்த 126 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் கூறியுள்ளது.