Hauts-de-Seine : யூத வழிபாட்டுத்தலம் முன்பாக குடும்பத்தினருக்கு மிரட்டல்.. ஒருவர் கைது!!

15 பங்குனி 2025 சனி 14:00 | பார்வைகள் : 694
யூத வழிபாட்டுத்தலமான synagogue முன்பாக வைத்து குடும்பம் ஒன்றை மிரட்டிய ஒருவரை Hauts-de-Seine மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Neuilly-sur-Seine ( Hauts-de-Seine ) நகரில் உள்ள யூத தேவாலயம் ஒன்றின் முன்பாக மார்ச் 13, வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. Paul-Chartrousse வீதியில் அமைந்துள்ள, Beth-Habad-Loubavitch synagogue வழிபாட்டுத் தலத்தில் வியாழக்கிழமை பிற்பகல் வழிபாட்டை முடித்துக்கொண்டு வெளியேறிய குடும்பத்தினர் சிலரை நபர் ஒருவர் அவதூறாக பேசியுள்ளார்.
வாகன தரிப்பிடம் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதமே மதவாத துவேச கருத்துக்களாக மாறியுள்ளது.
அவதூறாக பேசிய நபர் ஒருவர் கத்தி ஒன்றை வைத்து மிரட்டியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.