'வீர தீர சூரன்' படத்தின் முதல் விமர்சனம்..

15 பங்குனி 2025 சனி 14:57 | பார்வைகள் : 954
விக்ரம் நடித்த "வீர தீர சூரன்" திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சற்றுமுன் படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் ரிலீஸ் செய்தியை அறிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை சென்சார் செல்வதற்கு முன் படக் குழுவினர்களுடன் பார்த்ததாகவும் கூறி படம் குறித்த தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவான ’வீர தீர சூரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. முதல் பாகத்திற்கு முன்பே இரண்டாம் பாகம் தயாராகியிருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்ததாக தகவல் வெளியானது.
படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்சாருக்கு செல்லும் முன் ’வீர தீர சூரன்’ படத்தை பார்த்தேன். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "மிகவும் திறமையான, உண்மையான இயக்குனர் அருண்குமார் அவர்களுக்கு நன்றி. அவருடைய அபாரமான கலைத்திறனை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன் காணும் வாய்ப்பு கிடைத்தது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.