இரண்டரை மணிநேரத்தில் ஒரு கடற்கரை!!
1 வைகாசி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 18552
பரிஸ் வாசிகளுக்கு கடற்கரைக்குச் செல்வது பெரும் பாடு... அதற்கென ஒரு நாள் ஒதுக்கி... குடும்பத்துடன் திட்டமிட்டு.. அது ஒரு பெரும் சோகம்!! சரி விடுங்கள்... பரிசில் இருந்து மிக அருகில் உள்ள கடற்கரை எது என இணையத்தில் தேடினோம். இரண்டரை மணிநேரத்தில் செல்லக்கூடிய கடற்கரை ஒன்று தென்பட்டது.
பரிசில் இருந்து Normandy செல்லவேண்டும். அங்குள்ள Deauville கடற்கரை தான், பரிசில் இருந்து குறைந்த நேரத்தில் செல்ல முடிந்த கடற்கரை ஆகும். இது தான் நாம் வழக்கமாக செல்லும் கடற்கரை ஆச்சே??!! மொத்த தூரம் 200.3 கிலோ மீட்டர்கள். மகிழுந்தில் செல்வதென்றால் இரண்டரை மணிநேர பயணம். (A13 சாலை)
Normandy இன் Calvados மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய கடற்கரை கிராமத்தின் மக்கள் தொகை மிக குறைவு, 4000 ஐ தொட்டாலே பெரிய ஆச்சரியம் தான்.
இந்த நகரத்தில் துறைமுகம், சூதாட்ட விடுதிகள் (Casino), ஆடம்பர உணவகங்கள், தங்குமிடங்கள், குதிரை ரேக்கிளா, சர்வதேச திரைப்பட விழா என மிக 'பிஸி'யான நகரமும், பணம் புரளும் நகரமுமாகும்.
இந்த கடற்கரை மிக அழகானது என்பதாலும்.. சுற்றுலாப்பயணிகளுக்கு மிக பிடித்தமான கடற்கரை என்பதாலும் நோர்மன் கடற்கரைகளின் மகாராணி (queen of the Norman beaches) என அழைக்கப்படுகிறது.
இந்த கடற்கரையின் தோற்றம் 1080 ஆம் ஆண்டு என்றாலும்... சரித்திரங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு.. ஒருவழியாக 18 ஆம் நூற்றாண்டில் Deauville கடற்கரை உருவானது.
பரிசுக்கு மிக அருகில் இருக்கும் கடற்கரையும், எல்லா தரப்பினரும் அனுபவிக்ககூடிய வகையில் அமைந்திருப்பதாலும்... இந்த கடற்கரை எப்போதும் 'ஸ்பெஷல்' தான்!!