பிரான்சுக்கு வருகை தரும் கனடாவின் புதிய பிரதமர்.. மக்ரோன் வரவேற்கிறார்!!

16 பங்குனி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2960
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) பிரான்சுக்கு வருகை தர உள்ளார். அவரது முதலாவது வெளிநாட்டு பயணமாக பிரான்ஸ் அமைந்துள்ளது.
மார்ச் 17, நாளை திங்கட்கிழமை அவர் வருகை தர உள்ளார். எலிசே மாளிகையில் வைத்து அவரை ஜனாதிபதி மக்ரோன் அவரை வரவேற்க உள்ளார். யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட உள்ளன.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாடு (Conférence des Nations unies sur l’Océan) பிரான்சில் இடம்பெற உள்ளது. அது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய பிரதமர் மார்ட் கார்னி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025