Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீன அங்கீகார மசோதாவை நிராகரித்த பிரித்தானிய அரசு

பாலஸ்தீன அங்கீகார மசோதாவை நிராகரித்த பிரித்தானிய அரசு

16 பங்குனி 2025 ஞாயிறு 05:01 | பார்வைகள் : 449


பாலஸ்தீனத்தை ஒரு தனிநாடாக அங்கீகரிக்க வலியுறுத்தும் Palestine Statehood (Recognition) Bill எனும் மசோதாவை பிரித்தானிய அரசு நிராகரித்துள்ளது.

இந்த மசோதாவை லிபரல் டெமோக்ராட் கட்சியின் முன்னாள் அமைச்சர் Baroness Northover முன்வைத்தார்.

லேபர் கட்சி மற்றும் சில அரசியல் தலைவர்கள் மசோதாவை ஆதரித்தும், இரு நாடு தீர்வு (Two-State Solution) உண்மையாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி இது பாலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என எதிர்ப்புத் தெரிவித்தது.

பிரித்தானிய வெளிவிவகாரத் துறை அமைச்சர் Baroness Chapman, "பாலஸ்தீனை அங்கீகரிப்பது முக்கியமானது. ஆனால், சரியான நேரத்தில் இதைச் செய்ய வேண்டும். இந்த மசோதா செயல்படுத்தும் காலக்கெடுவால் அமைதித் திட்டத்துக்கு இடையூறாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.

மசோதா இரண்டாவது வாசிப்பில் எதிர்ப்பின்றி நிறைவேறியது. ஆனால், நாடாளுமன்றத்தில் இது நிறைவேற வாய்ப்பு குறைவாக இருக்கலாம்.

இரு நாடுகளுக்கான தீர்வுக்காக சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அரசு உறுதி அளித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்