வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
16 பங்குனி 2025 ஞாயிறு 05:22 | பார்வைகள் : 2309
நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஐ.நா., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா., சார்பில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டின் 4ம் காலாண்டில், மற்ற முன்னணி நாடுகளைக் காட்டிலும் இந்தியா, சீனா ஆகியவை வர்த்தகத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளன.
முன்னேறிய நாடுகள் கூட வர்த்தகத்தில் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவும், சீனாவும் வளர்ச்சியை அடைந்து வருகின்றன. அதே வேளையில், வரும் காலாண்டுகளில், உலகம் முழுவதும் பொருளாதார பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் நடந்து வரும் மாற்றங்கள், உலகளாவிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் உலகளாவிய வர்த்தக வளர்ச்சியை பாதிக்க கூடும்.
2024ம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகம் கிட்டத்தட்ட 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து, 33 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan