Paristamil Navigation Paristamil advert login

வியக்க வைக்கும் Cathédrale de Strasbourg!! - சில தகவல்கள்!!

வியக்க வைக்கும் Cathédrale de Strasbourg!! - சில தகவல்கள்!!

26 சித்திரை 2017 புதன் 14:30 | பார்வைகள் : 18774


கடந்த வாரத்தில் Strasbourg இல் உள்ள Grande Île குறித்து பிரெஞ்சு புதினத்தில் பார்த்திருந்தோம். இன்று, Strasbourg இல் உள்ள.. மிக பழமையான ஒரு தேவாலயம் குறித்து பார்க்கலாம்!!
 
நம்புவதற்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கும். தேவாலயத்தின் கட்டிடப்பணிகள் ஆரம்பித்தது 1015 ஆம் ஆண்டு. ஆனால் நான்கு நூற்றாண்டுகளாக கட்டிடப்பணிகளை இழு இழு என இழுத்து.. நீட்டி.. ஒருவழியாக 1439 ஆம் ஆண்டு கட்டி முடித்து திறந்து வைத்தனர். அதற்குள்ளாக பல மன்னர்கள், கட்டிட கலை நிபுணர்கள் என பல கைகள் மாறிவிட்டது. ஆரம்பத்தில் போட்டிருந்த 'ப்ளான்' ஒன்று என்றால்... 200 வருடங்களின் பின்னர், திட்டமே மாறிவிட்டது. 
 
இருந்தாலும் ஒரு வழியாக கட்டிடம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த கட்டிடத்துக்கு ஜெர்மனைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் Erwin von Steinbach இன் பங்கு கணிசமாக உள்ளது. 1277 இல் இருந்து 1318 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த கட்டிடம் இவர் எண்ணத்தில் தான் கட்டப்பட்டது. 
 
கட்டிடத்தின் உயரம் 142 மீட்டர்கள். அதானவது 466 அடி உயரம். கட்டிடத்தின் உயரம் அனைவராலும் பேசு பொருள் ஆனது. ஏன் தெரியுமா? 1647 ஆம் ஆண்டில் இருந்து 1874 ஆம் ஆண்டு வரையான 227 ஆண்டுகள்... 'உலகின் மிக உயரமான கட்டிடம்!' என்ற பெருமையை கம்பீரமாக தன் வசம் வைத்திருந்தது. 
 
தற்போது நிலவரத்தின் படி, உலகில் உள்ள மிக உயரமான தேவாலயங்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது இந்த தேவாலயம். Vosges நகரம் தெரியுமில்லையா? அங்கிருக்கும் மலையில் இருந்து பார்த்தால் Cathédrale de Strasbourg தெளிவாக தெரியுமாம் ஒரு காலத்தில். 
 
ஜேர்மனி மற்றும் பிரெஞ்சு கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் இந்த தேவாலயத்தைக் காண பல சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிகின்றனர். நீங்களும் சந்தப்பம் கிடைத்தால் ஒருதடவை சென்று வாருங்களேன்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்