விளையாட்டுக்களில் புர்கா உடை.. தடை செய்ய வேண்டும்!!

16 பங்குனி 2025 ஞாயிறு 07:55 | பார்வைகள் : 614
விளையாட்டு போட்டிகளின் போது இஸ்லாமிய கலாச்சார உடையான புர்கா (veil) அணிவதை தடை செய்ய வேண்டும் எனும் கருத்து மக்களிடையே வலுத்துள்ளது.
மிக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. பெண்களுக்கான உடைபந்தாட்டம், கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் இடம்பெறும் போது, மேற்படி புர்கா உடை அணிந்து விளையாடுவதை தடை செய்ய வேண்டும் எனவும், விளையாட்டுக்களுக்கு என இருக்கும் பிரத்யேகமான உடைகளையே அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கருத்தை 73% சதவீதமானவர்கள் ஏற்றுக்கொண்டும், 26% சதவீதமானவர்கள் நிராகரித்தும் உள்ளனர். 1% சதவீதமானவர்கள் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளனர்.
* இந்த கருத்துக்கணிப்பு மார்ச் 13-14 ஆகிய திகதிகளில் 18 வயது நிரம்பிய 1,010 பேரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.