Paristamil Navigation Paristamil advert login

பிரான்சும் ஜனாதிபதிகளும்! - ஒரு சுருக்கமான வரலாறு!!

பிரான்சும் ஜனாதிபதிகளும்! - ஒரு சுருக்கமான வரலாறு!!

24 சித்திரை 2017 திங்கள் 13:30 | பார்வைகள் : 18372


பிரான்ஸ் மன்னர் காலத்தில் இருந்து விடுபட்டு, ஜனாதிபதி ஆட்சி முறைக்கு மாறியது 1848 ஆம் ஆண்டு. பிரான்சின் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை Louis-Napoléon Bonaparte (மூன்றாம் நெப்போலியன்) பெற்றுக்கொள்கிறார். 1848 இல் இருந்து 1852 வரையான நான்கு வருடங்கள் அவர் ஜனாதிபதியாக நீடிக்கின்றார். இது இரண்டாவது  குடியரசாகும். இரண்டாம் குடியரசில் இவர் ஒருவர் மாத்திரமே ஜனாதிபதியாக இருந்தார். 
 
மூன்றாவது குடியரசு 1870 ஆம் ஆண்டு தொடக்கம் 1940 ஆம் ஆண்டுவரையான 70 வருடங்கள் ஆகும். இந்த கால கட்டத்தில் 14 ஜனாதிபதிகள் ஆட்சி மாறினர். ஐந்து வருடங்கள் என்ற நிரந்தரமான ஆட்சிக்காலம் இல்லாமல்... ஒருவர் மூன்று வருடங்கள்... சிலர் ஏழு வருடங்கள்.. 9 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தவர்களும் இந்த மூன்றாம் குடியரசில் உண்டு. குறிப்பாக 1920 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் மூன்று ஜனாதிபதிகள் மாற்றம் கண்டனர். Raymond Poincaré, Paul Deschanel, Alexandre Millerand அந்த மூன்று ஜனாதிபதிகளும் ஆகும்..
 
 
1940 ஆம் ஆண்டில் இருந்து 1947 ஆம் ஆண்டு வரை பிரான்சில் ஜனாதிபதியே இல்லை. அதன் பின்னர் Vincent Auriol, 1947 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆக, நான்காம் குடியரசு உருவானது. அவர் அடுத்து வந்த ஏழு வருடங்கள் ( 1954 வரை) ஜனாதிபதியாக இருந்தார். அதன் பின்னர் René Coty என்பவர்  1954 ஆண்டு தொடக்கம் 1959 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார். 
 
ஐந்தாம் குடியரசு ஆரம்பித்தது 1958 ஆம் ஆண்டு.  மாவீரன், கட்டளைத் தளபதி Charles de Gaulle பத்து வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார் ( 1959 ஆண்டு முதல் 1969 வரை) அதன் பின்னர் 1969 ஆம் ஆண்டு Georges Pompidou ஜனாதிபதியாக தேர்வானார். (1969–1974), தொடர்ந்து, 1974 ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டுவரையான 7 வருடங்கள் Valéry Giscard d’Estaing பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்தார். 
 
ஐந்தாம் குடியரசின் நான்காவது ஜனாதிபதி François Mitterrand, 14 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். 1981 ஆண்டில் இருந்து 1995 ஆம் ஆண்டுவரை இவர் பதவியில் இருந்தார். 14 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒரே நபர் இவராவார். 
 
அதன் பின்னர், Jacques Chirac ஜனாதிபதியானார். நிக்கோலா சர்கோஷி ஜனாதிபதியாக வருவதற்கு முன், 1995 ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரையான 12 வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தார். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று Nicolas Sarkozy, 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்தார். 2012 ஆம் ஆண்டு அவரின் பதவிக்காலம் முடிய, மீண்டு தேர்தல் வந்தது. அப்போது, ரீ பபுளிக்கன் கட்சியைச் சேர்ந்த François Hollande ஜனாதிபதியானார். 2012 ஆரம்பித்த இவரது ஆட்சிக்காலம், இவ்வருடத்துடன் நிறைவுக்கு வர, இதோ ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்கெடுப்பு  தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. 
 
முதல் சுற்றில் அபார வெற்றி பெற்ற இம்மானுவல் மக்ரோன், அரசியலுக்குள் நுழைந்து 15 வருடங்களே ஆகியுள்ளன. தவிர தனது En Marche! எனும் கட்சியை கடந்தவருடம் தான் ஆரம்பித்தார். மேலும் இம்மானுவல் மக்ரோனே இரண்டாம் சுற்று தேர்தலிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்