ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?

16 பங்குனி 2025 ஞாயிறு 09:02 | பார்வைகள் : 764
58 வயதாகும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று காலை 7.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரகுமானுக்கு சில பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். ரகுமான் தற்போது ரம்ஜான் நோன்பை கடைபிடித்து வருகிறார். அவர் லண்டலில் இருந்து இன்று காலை தான் சென்னைக்கு வந்திருக்கிறார். உடம்பில் நீர்ச்சத்து குறைந்ததால் அவர் மிகவும் சோர்வடைந்துவிட்டாராம். லண்டனில் அதிக வேலை இருந்ததாலும், கூடவே நோன்பு இருந்ததாலும் அவர் மிகவும் சோர்வடைந்துவிட்டாராம்.
அதன்பின் உடல் சோர்வு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமான். அங்கு பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பியதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இன்று காலை ஏ.ஆர்.ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை அமைந்துள்ளது.