Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட சிறுவன் கைது!!

பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட சிறுவன் கைது!!

16 பங்குனி 2025 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 782


பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்ட சிறுவன் ஒருவனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மார்ச் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இக்கைது சம்பவம் Vesoul (Haute-Saône) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் பயங்கரவாத தாக்குதல் ஒன்றினை நிகழ்த்த திட்டம் வகுத்துள்ளான். மேலதிக தகவல்கள் எதனையும் வழக்கறிஞர் அலுவலகம் வெளியிடவில்லை.

பயங்கரவாத தடுப்பிரிவினரான parquet national antiterroriste (PNAT) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன மாதிரியான தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்