Paristamil Navigation Paristamil advert login

உலகின் தலைசிறந்த தொடருந்து நிலையம்! - Gare du Nord!

உலகின் தலைசிறந்த தொடருந்து நிலையம்! - Gare du Nord!

4 கார்த்திகை 2016 வெள்ளி 15:17 | பார்வைகள் : 19265


நாம் எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும்.. அல்லது கடந்து செல்லும் Gare du Nord தொடருந்து நிலையம் பற்றி உங்களுக்கு தெரியுமா?? பல சாதனைகளையும் பல அசாத்திய சேவைகளையும் செய்து வருகிறது Gare du Nord. சரி... இதோ... தெரிந்த Gare du Nord... தெரியாத சில தகவல்கள்!!
 
Société nationale des chemins de fer français (SNCF)க்கு சொந்தமான இந்த Gare du Nord நிலையம், பிரான்சின் மிகப்பெரிய தொடருந்து நிலைய பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. 
 
1864 ஆண்டு கட்டி முடித்து ஆரம்பிக்கப்பட்ட நிலையம், பின்னர் 1889 ஆம் ஆண்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டது. அதன் பின்னர் கூட  சில பல மாற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
பெல்ஜியத்தின் ப்ரூஸ்லஸ் நகருக்கு போகனுமா... பிரித்தானியாவின் லண்டனுக்கு போகனுமா... ஜெர்மனி, நெதர்லாந்து... இல்ல, இதோ பக்கத்துல இருக்கிற செந்தனிக்கு போகனுமா... இங்க வாங்க!! மொத்தம் 36 ஃப்ளாட்பாரம் (நடைபாதை) இருக்கிறது இங்கு. (அதில் இரண்டு பொதுமக்கள் பாவனைக்கானது அல்ல) பிரான்சின் அத்தனை தொடருந்து சேவைகளையும் இங்கே ஒரே நிலையத்தில் நீங்கள் காணலாம். 
 
யூரோஸ்டார், பரிஸ் மெட்ரோ, RER, PER, TGV என எண்ணற்ற சேவைகள் வழங்கும் இந்த நிலையத்துக்கு வருடாந்தம் 190 மில்லியன் பேர் வந்து செல்கிறார்கள். அடேயப்பா!
 
மற்றுமொரு அசைக்கமுடியா சாதனை ஒன்று தன்வசம் வைத்திருக்கிறது Gare du Nord. ஐரோப்பாவின் மிக 'பிஸி'யான தொடருந்து நிலையமாகவும், உலகின் 24வது 'பிஸி'யான தொடருந்து நிலையமாகவும் இருக்கிறது இந்த Gare du Nord. 
 
1792 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த பிரெஞ்சு கட்டிடகலைஞரான Jacques Ignace Hittorff என்பவரே இந்த Gare du Nord ஐ வடிவமைத்தவராகும். 
 
இந்த தகவலை பார்த்து மயங்கி விடாதீர்கள். ஒரு நாளைக்கு Gare du Nord நிலையத்துக்கு ஏழு இலட்சம் பேர் வந்து செல்கிறார்களாம். 
 
இந்த Gare du Nord, ஏகபோக பிரெஞ்சு திரைப்படங்களில் எல்லாம் வந்து சென்றிருக்கிறது. Les Poupées Russes, The Pursuit of Love திரைப்படங்கள் உதாரணம். அதை விட அமெரிக்க திரைப்படங்கள், பிரெஞ்சு தொலைக்காட்சி தொடர்கள் என அடிக்கடி எட்டிப்பார்க்கும் Gare du Nord.
 
Eurostar மற்றும் Thalys தொடருந்துகள் தான் Gare du Nord இல் இருந்து இயக்கப்படும் அதிவேக தொடருந்துகள் ஆகும். பெல்ஜியம் மற்றும் பிரித்தானியாவுக்கு தினப்பயணம்.
 
மிக முக்கியமாக, Gare du Nord எனும் பெயர் விரைவில் Paris Nord என மாற்றம் அடைய இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அட்டகாசமான செய்திகள் தான் இல்லையா?! அடுத்தமுறை நீங்கள் Gare du Nord செல்லும் போது இந்த செய்திகள் அனைத்தும் தெரிந்துவைத்துள்ள பெருமை உங்களுக்கு கிட்டட்டும்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்