அல்காரஸ் 'நம்பர்-2': ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில்

15 சித்திரை 2025 செவ்வாய் 15:02 | பார்வைகள் : 248
ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயினின் அல்காரஸ் 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார்.
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.
ஒற்றையர் தரவரிசையில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 7720 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்தை கைப்பற்றினார்.
சமீபத்தில் மான்டி கார்லோ தொடரில் கோப்பை வென்ற இவர், தனது 6வது மாஸ்டர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். இத்தொடரில் பைனல் வரை சென்ற இத்தாலியின் லாரென்சோ முசெட்டி (3200), 16வது இடத்தில் இருந்து முதன்முறையாக 11வது இடத்துக்கு முன்னேறினார்.
முதலிடத்தை இத்தாலியின் ஜானிக் சின்னர் (9930 புள்ளி) தக்கவைத்துக் கொண்டார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (7595) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி (26வது இடம்), ரோகன் போபண்ணா (39வது) முன்னேற்றம் கண்டனர். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீராம் பாலாஜி, 63வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.