Paristamil Navigation Paristamil advert login

ஒவ்வொருவர் தலையிலும் கடன்சுமை - பிரதமர்!

ஒவ்வொருவர் தலையிலும் கடன்சுமை - பிரதமர்!

15 சித்திரை 2025 செவ்வாய் 16:40 | பார்வைகள் : 1376


இன்றை பாதீட்டு தொடர்பாக பிரதமர் ஒரு செவ்வி வழங்கி உள்ளார். அதில்,

«தற்போதைய பிரான்சின் கடன் ஒவ்வொருவர் தலையிலும் 50.000 யூரோக்கள் கடன் உள்ளது. ஒரு நான்கு பேர் உள்ள குடும்பத்தின் மேல் இரண்டு இலட்சம் யூரோக்கள் கடன் உள்ளது» எனத் தெரிவித்துள்ளார்.

«பிரான்சின் மக்கள் மிகவும் சிக்கனமாக வாழ வேண்டும்» என்று கூறி, அரசாங்கத்தின் தவறுகளை மக்களின் தலைகளில் சுமத்தியுள்ளார் பிரதமர்.

போரிற்கான பணமும், உக்கைரனிற்கான உதவியும் மிச்சப்படுத்தப்பட்டால் மக்கள் மீது சுமை அதிகரிக்காது  என்றும் பிரான்சின் பாதீட்டை எதிர்ப்பதாகவும், மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளதாகவும், பல எதிர்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.

2010 ஆம் ஆண்டு, பெரும் சுமையால் அரசு கலைக்கப்பட்டு  பெரும் கடன் சுமைக்குள் சென்ற கிறீஸ் நாட்டை விட மிகவும் மோசமான நிலையில், பிரான்ஸ் உள்ளது என்றும் ஜோன்-லுக் மெலோன்சோன் தெரிவித்துள்ளார். அவரது கடசியும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்