Coffee பொதிகளை திருடி விற்று தாய்லாந்துக்கு டூர்!

2 கார்த்திகை 2016 புதன் 10:30 | பார்வைகள் : 23412
மில்லியன் யூரோக்கள் வரை கொள்ளை இடம்பெறும் இந்த பிரான்சில் தான், இப்படியான 'அதிர்ச்சி' திருட்டுக்களும் இடம்பெறுகிறது. ஏன் அதிர்ச்சி என்றால்... போயும் போயும் Coffee பொதிகளை திருடியிருக்கிறார்களே என்றுதான்.
சம்பவம் Drôme மாவட்டத்தின் Saulce-sur-Rhône பகுதியில் உள்ள ஒரு Caféயில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் தெரிவித்ததன் படி, திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதை கடந்த திங்கள் அன்றே தான் தெரிந்துகொண்டுள்ளார்கள். Caféகளில் மிக விலை உயர்ந்த café இது. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சில ஆயிரம் யூரோக்கள் ஆகும். இந்த 'ஆடம்பர' caféக்களை திருடியவர்கள் யார் என்ற விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
விஷயம் என்னவெனில்..., குறிந்த இந்த ஆடம்பர Café இந்த குறித்த ஒரு café கடைக்காக தயாரிக்கப்படுவதாகும். இதற்கு முன்னரும் இதுபோல் ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்று ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கினார்.
143 café பொதிகளை திருடி 5000 யூரோக்களுக்கு விற்று தாய்லாந்துக்கு டூர் போக ப்ளான் பண்ணியிருந்தேன் என அவர் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அடேய்களா...!!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025