சிறைச்சாலைகள் மீதான தாக்குதலுக்கு பின்னால் தீவிர இடதுசாரி வன்முறை இயக்கங்களா?

16 சித்திரை 2025 புதன் 07:26 | பார்வைகள் : 7853
பிரான்சில் கடந்த இரு நாட்களாக பல சிறைச்சாலைகள் மீது ஒருங்கிணைந்த வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் வாகனங்கள் எரிக்கப்பட்டு, சில இடங்களில் தீவிர ஆயுதங்களுடன் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றுள்ளதுமை நாம் அறிந்ததே.
துலோன்-லா-பார்லெத் (Toulon-La Farlède) சிறைச்சாலையின் கதவுக்கு சிவப்பு பூச்சால் "DFM" (Droits des prisonniers français) என எழுதப்பட்டிருந்தது. இது கைதிகளுக்கான உரிமையை குறிக்கும் செய்தியாகும்.
Villepinte, Valence, Marseille, Réau போன்ற இடங்களில் சிறை காவலர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள Telegram, Signal போன்ற குழுக்கள் இந்த தாக்குதல்களை ஊக்குவித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதிகாரிகள் இந்த தாக்குதல்களை “தீவிர இடதுசாரி இயக்கங்கள்” மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறுகிறார்கள். தற்காலிகமாக இது பயங்கரவாத தாக்குதல் என கருதப்பட்டு, தேசிய பயங்கரவாத வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் காவல்துறையினர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் கீழ் விசாரணையை மேற்கொள்கின்றனர்.
நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் (Gérald Darmanin) இது மிக ஆபத்தான போதைப் பொருள் கடத்தல்கார கைதிகளை உயர் பாதுகாப்பு சிறைகளில் சேர்த்ததற்கு தரும் பதிலடி என்று கூறினார். இத்தகைய தாக்குதல்களால் காவல்துறையும் சிறை நிர்வாகமும் கடும் பதற்றத்தில் உள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3