Paristamil Navigation Paristamil advert login

சிங்கப்பூரில் அடுத்த தேர்தல் திகதி அறிவிப்பு

சிங்கப்பூரில் அடுத்த தேர்தல் திகதி அறிவிப்பு

16 சித்திரை 2025 புதன் 03:38 | பார்வைகள் : 225


சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

1965 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி (PAP) ஆட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 2020 இல் நடந்த தேர்தலில் PAP கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்த்தாலும் அதன் வாக்கு வங்கி முன்பு எப்போதும் இல்லாததை விட 61 சதவீதம் ஆக சரிந்தது.

மொத்தம் உள்ள 93 இடங்களில் 83 இடங்களில் PAP வென்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தாலும், எதிர்கட்சியான தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 6 இல் இருந்து 10 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு வேண்டி இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 3 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் ஏப்ரல் 23 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தல், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பின் நடைபெறும் 14-ஆவது பொதுத்தேர்தல் ஆகும். இந்த தேர்தலிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் கடந்த தேர்தலில் மக்களிடையே நிலவிய அதிருப்தியை சரிக்கட்ட தற்போதைய பிரதமரும் PAP கட்சியின் தலைவருமான லாரன்ஸ் வோங் திட்டமிட்டுள்ளார்.

அதிருப்தியடைந்த இளம் வாக்காளர்களிடையே கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களைக் கொண்டு செல்ல கட்சி வியூகம் வகுத்து வருகிறது.
வரும் தேர்தலில் 30 புதுமுகங்களைக் களமிறக்க வோங் திட்டமிட்டுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்