சகல துறைகளிலும் இறுக்கம்.. மோசடிகளில் இருந்து €15 பில்லியன் சேமிக்க திட்டம்!!

16 சித்திரை 2025 புதன் 08:00 | பார்வைகள் : 796
பொது மோசடிகளில் இருந்து வரும் 2026 ஆம் ஆண்டில் €15 பில்லியன் யூரோக்கள் சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிதிகளுக்கான அமைச்சர் Amélie de Montchalin தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ள பற்றாக்குறையை தீர்க்க €40 பில்லியன் யூரோக்கள் தேவை என செய்திகள் வெளியாகியிருந்தது. அதை அடுத்து அனைத்து துறைகளிலும் மிக கடுமையான இறுக்கமான நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக வரி செலுத்துவதில் இடம்பெறும் மோசடி மற்றும் மருத்துவக்காப்புறுதி மோசடிகள் என சகல துறைகளிலும் இடம்பெறும் மோசடிகளை கட்டுப்படுத்தி அதில் இருந்து €15 பில்லியன் யூரோக்களை சேமிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதில் இடம்பெற்ற மோசடியில் மட்டும் €20 பில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பணம் 'பிரெஞ்சு மக்களின் பணம்' என அமைச்சர் Amélie de Montchalin குறிப்பிட்டார்.