Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் சிறைத்தாக்குதல்!! வாகனங்கள் தீக்கிரை!!

மீண்டும் சிறைத்தாக்குதல்!! வாகனங்கள் தீக்கிரை!!

16 சித்திரை 2025 புதன் 08:16 | பார்வைகள் : 356


அகன் (Agen) மற்றும் தூலேன் (Toulon) சிறைச்சாலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து,  இன்று அதிகாலை தரஸ்கோன் (Tarascon - Bouches-du-Rhône)சிறைச்சாலையிலும் கலவரமும் தாக்குதல்களும் நடந்துள்ளன.

இந்தச் சிறைவளாகத்தில் மூன்று வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் இந்தச் சிறையின் கண்கானிப்பாளர்களின் வாகனங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் தரித்து நிற்கும் பகுதி கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டு இலத்திரனியல் சங்கேத எண் பாதுகாப்புடன் மூடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5h00 மணியளவில் இதையும் மீறி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

 «தாக்குதல் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இதற்கு மிகவும் இறுக்கமான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேணடும் « என நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்