சென் நதியில் மிதக்கும் மகிழுந்து! - அடடே அட்டகாசம்!!
28 ஐப்பசி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19024
சென் நதியில் படகில் போவது ஆனந்தமாக இருக்கும். மகிழுந்தில் போனால்? பரிஸ் நகரவாசிகளே... தயாராகுங்கள்... விரைவில் வருகிறது மிதக்கும் மகிழுந்து.
அதிகாலையில் வேலைக்கு போவதற்கு இனிமேல் நீங்கள் ட்ராமுக்காகவோ... தொடருந்துக்காகவோ காத்திருக்கவேண்டியதில்லை... இதோ.. சென் நதியில் வலம் வரும் மிதக்கும் மகிழுந்தில் உலாச பயணம் போகலாம்.
இந்த நவீன மகிழுந்துக்கு பெயர் Sea Bubbles. (கடல் குமிழிகள்) ஆகும். முழுக்க முழுக்க பிரெஞ்சு தயாரிப்பான இந்த கடல் குமிழி, விரைவில் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் முதல்கட்டமாக சென் நதியில் வெள்ளோட்டம் விடப்போகிறார்கள். இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய இந்த மிதக்கும் மகிழுந்து, மணிக்கு 18 கிலோமீட்டர்கள் பயணிக்குமாம். அளவில் மிக சிறிய மோட்டார் ஒன்றும், சூரிய சக்தியில் (சோலார்) இயங்கும் படியும் கொண்டுள்ளதாம்.
ஒரு பகுதியில் இருந்து நீங்கள் வாடகைக்கு பெற்றுக்கொண்டு... நீங்களே அதை இயக்கி.. போகவேண்டிய இடத்துக்கு (ஸ்டேஷன்) சென்று நிறுத்திவிட்டு, உங்கள் அலுவலகத்துக்கு போய்க்கொண்டே இருக்கலாம்!
'என் மகள் கொடுத்த 'ஐடியா' தான் இது!' என்கிறார் இந்த மிதக்கும் மகிழுந்தை உருவாக்கிய Alain Thébault. வாங்க மிதக்கலாம்!!