மீண்டும் வெள்ளப்பெருக்கு - மக்களிற்கு எச்சரிக்கை!!.

16 சித்திரை 2025 புதன் 08:32 | பார்வைகள் : 304
இன்று புதன்கிழமையும் பிரான்சின் ஐந்து மாவட்டங்களிற்கு பிரான்சின் வாநிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Alpes-de-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Vaucluse ஆகிய ஐந்து மாவட்டங்களிற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதுடன் மிகவும் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதே நேரம் வானிலை அவதானிப்பு மையம், மேலும் 19 மாவட்டங்களிற்கு மழை மற்றும் வெள்ளத்திற்காக மஞ்சள் எச்சரிக்கையையும் இன்று வழங்கி உள்ளது.