Paristamil Navigation Paristamil advert login

வருமானத்துக்கு ஏற்ற மருத்துவச் செலவு! - பற்றாக்குறையை தீர்க்க அதிர்ச்சி முடிவெடுத்த அரசு!!

வருமானத்துக்கு ஏற்ற மருத்துவச் செலவு! - பற்றாக்குறையை தீர்க்க அதிர்ச்சி முடிவெடுத்த அரசு!!

16 சித்திரை 2025 புதன் 08:36 | பார்வைகள் : 784


வருமானத்துக்கு ஏற்றால் போல் மருத்துவக்காப்பீட்டுத் தொகையை வழங்கும் திட்டம் ஒன்றை அரசு ஆலோசித்து வருகிறது.

அதிக வருமானம் கொண்டவர்களுக்கு குறைந்த காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும், குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகைகளே வழங்கப்பட வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது. 

மேற்படி பரிந்துரையை தணிக்கையாளர் நீதிமன்றம் (Cour des Comptes) முன் மொழிந்துள்ளது. எவ்வாறாயினும் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவது எவ்வளவு தூரம் சாத்தியம் என தெரிவிக்கப்படவில்லை. 

€265.4 பில்லியன் யூரோக்கள் 2025 ஆம் ஆண்டில் காப்பீடு தொகையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்களை சேமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், அந்த பற்றக்குறையை தீர்க்கவே இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்