மேலும் ஒரு பெண் மாயம் - அதிர்ச்சி -

16 சித்திரை 2025 புதன் 09:18 | பார்வைகள் : 1107
அகெதே ஹிலாரே எனும் பெண் பயிற்சி ஓட்டத்திற்குச் சென்ற வேளை விவொன் (Vivonne - Vienne)) நகரில் கடந்த பத்தாம் திகதி கானாமற்போயிருந்ததில் இருந்து ஜோந்தார்மினரின் படையணி பெரும் தேடுதல் வேட்டை நடந்து வருகின்றது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் ஒரு அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
இந்தப் பெண் காணாமற்போன அதே நாள், அதிலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் இன்னுமொரு பெண் காணாமற் போயுள்ளார்.
90 வயதுடைய இந்த மூதாட்டி காணமற்போன இடத்தில் அவரது பொல்லும் சில பொருட்களும் கண்டெடுககப்பட்டுள்ளது.
இது ஜோந்தார்மினரின் தேடுதலில் புதிய பரிமாணத்தை வழங்கி உள்ளது.