பாடகி பி. சுசிலா கவலைக்கிடம்….

16 சித்திரை 2025 புதன் 11:25 | பார்வைகள் : 1592
தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி கோலாட்சி செய்த பாடகிகளில் ஒருவர் பி. சுசிலா.பாடகி பி. சுசிலா கவலைக்கிடம்.... கை விரித்த மருத்துவர்கள்!இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பல பாடல்களைப் பாடி ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர்.
அந்த வகையில் இவர் கிட்டத்தட்ட 40 வருடங்கள் திரைத்துறையில் பணியாற்றி 25 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடி இருக்கிறார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 4000 பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் தேசிய விருது உட்பட பல விருதுகளை அள்ளி இருக்கிறார்.
இவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் எவரும் இலர். இவரை பலரும் இசைக்குயில், மெல்லிசை அரசி, இசையரசி, கானா சரஸ்வதி என பல பெயர்களால் அன்புடன் அழைக்கின்றனர். இத்தகைய பெருமைகளை உடைய பி. சுசிலா தற்போது வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
அதன்படி சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பி. சுசிலா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கை விரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது இன்னும் 48 மணி நேரம்தான் அவகாசம் என்று கூறிவிட்டார்களாம். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பி. சுசிலா மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1