Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?

16 சித்திரை 2025 புதன் 11:29 | பார்வைகள் : 290


குட், பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் அவரது அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

 விடாமுயற்சி திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், அந்த திரைப்படம் அஜித் ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.

 தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் குமாரை மாஸ்ஸான படத்தில் பார்த்ததாக ரசிகர்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.

 குறிப்பாக மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் படம் மிக மிகவும் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அடுத்து எந்த இயக்குனர் படத்தில் அஜித் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

 இதற்கிடையே கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தில் அஜித் இடம் பெறுவார் என சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் வைரலாக தகவல்கள் பரவின.ஆனால் தற்போதைய தகவலின்படி தனுஷின் வாத்தி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி படத்தில் அஜித் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 இயக்குனர் வெங்கி அட்லூரி சூர்யா நடிக்கும் அவரது 46 ஆவது படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதனை முடித்துக் கொண்டு அஜித் படத்தை அவர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மே 1-ஆம் தேதி அஜித் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்