நெய் சோறு

16 சித்திரை 2025 புதன் 11:39 | பார்வைகள் : 271
நெய் சோறு, பாக்க ரொம்ப சிம்பிளா இருக்கும் ஆனா அதோட சுவை , கமகமக்கும் வாசனை அதுக்கு வேற எந்த சாப்பாடும் ஈடு கொடுக்க முடியாது. கண்டிப்பா எல்லாரும் நெய் சோறு ட்ரை பண்ணிருப்போம். ஆனா பக்காவான பாய் வீட்டு நெய் சோறு எப்படி செய்யலாம்னு ஒரு சின்ன டிப்ஸ் பார்க்கலாம் வாங்க.
நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி - 2 டம்ளர், பெரிய வெங்காயம் - 2 , சின்ன தக்காளி - 1,பச்சைமிளகாய் - 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன், புதினா ,மல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு,சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்நெய் - 3 ஸ்பூன், முந்திரிப் பருப்பு - 5 பட்டை - இரண்டு துண்டு, ஏலக்காய் 2,கிராம்பு - 2 ,பிரிஞ்சி இலை - 2 ,சோம்பு - கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு.
செய்முறை பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி கொள்ளவும்.தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானவுடன் பட்ட ,சோம்பு, கிராம்பு ஏலக்காய் ,பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து 2 நிமிடம் வறுத்து விட்டு நறுக்கிய வெங்காயம் , பச்சைமிளகாய் போட்டு நன்கு வதக்கவும் .
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி ,பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.பின்பு அதனுடன் தக்காளி , புதினா ,கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்இரண்டு டம்ளர் அரிசிக்கு அதே டம்ளரில் மூன்றரை {3 1/2 } டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து சேர்க்கவும். தண்ணீரில் உப்பு பார்த்துவிட்டு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.பின்பு 10 நிமிடம் கழித்து திறந்து கிளறினால் மிகவும் சுவையான கம கமன்னு மணக்கிற பாய் வீட்டு நெய் சோறு ரெடி. இந்த சாதத்திற்கு மட்டன் கிரேவி அல்லது சிக்கன் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்