Chambly: குடிக்கத் தகுதியற்ற நீர்! வதந்தி !

16 சித்திரை 2025 புதன் 12:00 | பார்வைகள் : 1040
ஓய்ஸ் பகுதியில், குறிப்பாக Chambly மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழாய் நீர் குடிக்க முடியாதது என சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, ஒரு தேதியில்லாத தவறான தகவலின் அடிப்படையில் பரவி உள்ளது.
Belle-Église பகுதியில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் அந்த செய்தியில் "அதிக மாசுக்கள் உள்ளன என்றும் குழாய் நீரை குடிக்க வேண்டாம்" என எச்சரித்தது. இதனால் மக்கள் பதற்றமடைந்தனர்.
இந்த வதந்தியைத் தொடர்ந்து, உள்ளூர் தண்ணீர் நிலையம் SMEPS, உள்ளுர் சுகாதார மையம் (ARS) மற்றும் நகராட்சி அலுவலகங்கள், தண்ணீர் முழுமையாகக் குடிக்கத்தக்கது என உறுதிபட தெரிவித்துள்ளது.