சிறைத்தாக்குதல்கள் பயங்கரவாதிகளா? - AK47 தாக்குதல் -

16 சித்திரை 2025 புதன் 12:38 | பார்வைகள் : 1345
பிரான்சில் பல சிறைகளில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்துள்ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தற்போதைய தகவல்களின் படி இந்தத் தாக்குதல்களில் சிறைகளை நோக்கி சரமாரியான AK47 துப்பாககிச் சூடுகளும் நடந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலிற்கு உள்ளான தூலோன் சிறைச்சாலைக்கு நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் சென்று பார்வையிட்டதுடன் அவர்களிற்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலிற்கான விசாரணைகள் பரிசின் பயங்கரவாத் தடைப்பிரிவினரால் மேற்கொள்ளப்படும் எனவும் ஜெரால்ட் தர்மனமன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலை அவர் பயங்கரவாதத் தாக்குதலாகவே பார்க்கின்றார்.