பரிஸ் பேருந்து வழித்தட ஒப்பந்தம்! 100 வேலைவாய்ப்புகள் இழப்பு!

16 சித்திரை 2025 புதன் 12:54 | பார்வைகள் : 1413
இல்-து-பிரான்ஸ் உள்ள இடதுசாரி, சமூக ஆர்வலர்கள் மற்றும் குடிமக்கள் குழுவின் தலைவர்கள் 18 பஸ் வழித்தடங்களை இத்தாலிய ATM நிறுவனத்துக்கு ஒப்படைத்த Île-de-France Mobilités இன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மற்றும் குறைந்த சம்பள வேலைக்காரர்களின் நுழைவு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உள்ளனர்.
ஆனால் இந்த ஒப்பந்தம் முறையாகவே நடைபெற்றது எனவும் ATM நிறுவனமானது தொழில்நுட்பம், சமூக நலன் மற்றும் பொருளாதார மதிப்பீட்டில் சிறந்த சலுகைகள் அளித்ததால் தேர்வு செய்யப்பட்டது எனவும் குற்றச்சாட்டுக்கு Île-de-France Mobilités மறுப்பு தெரிவித்துள்ளனர்.
2026 இல் RATP நிறுவனத்தின் 785 ஊழியர்களை ATM நிறுவனம் பணி அமர்த்துவது கட்டாயம் என்றாலும், சுமார் 100 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இடதுசாரி குழு ஆவணங்களை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.