Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் மீண்டும் குண்டுவெடிப்பு பீதி : போக்குவரத்து முடக்கம்! மக்கள் வெளியேற்றம்!!

பரிஸில் மீண்டும் குண்டுவெடிப்பு பீதி : போக்குவரத்து முடக்கம்! மக்கள் வெளியேற்றம்!!

16 சித்திரை 2025 புதன் 21:27 | பார்வைகள் : 2080


பரிஸ் நகரின் Champs-Elysées சாலையில் உள்ள galerie des arcades வணிக வளாகத்தில் ஏப்ரல் 16 புதன்கிழமை மாலை குண்டுவெடிப்பு எச்சரிக்கை காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. தரைத்தளத்தில் உள்ள Starbucks கடையில் வெடிகுண்டு இருக்கலாம் என தகவல் கிடைத்ததை அடுத்து, அவசரமாக அந்த கலரியில் உள்ள அனைத்து வணிகக் கடைகளும் மூடப்பட்டது.

போலீசார் மற்றும் ஆய்வுக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சாலையில் போக்குவரத்து இருபுறமும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

 நீண்ட நேர சோதனையின் பின் வெடிகுண்டு எதுவும் இருப்பது தெரியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறைவடைந்து மக்கள் மீண்டும் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். வெடி குண்டு புரளி பரப்பியவரை கண்டறிவதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலையும் gare de l'est தொடருந்து நிலையத்தில் வெடிகுண்டு புரளி பரவியது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்