சிறைச்சாலைகளுக்கு தீவைப்பு.. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் - ஜனாதிபதி மக்ரோன்!!

17 சித்திரை 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1240
சிறைச்சாலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, வாகனங்களுக்கு தீ வைத்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்சில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. சிறைச்சாலை அதிகாரிகளின் மகிழுந்துகள் எரியூட்டப்பட்டிருந்தன. ஒரே இரவில் நாட்டின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்ற இந்த தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அதை அடுத்து, நேற்று ஏப்ரல் 16, புதன்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இது தொடர்பில் தெரிவிக்கையில், "சிறைச்சாலைகள் மீதும் அதிகாரிகள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என தெரிவித்திருந்தார்.
"குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்" எனவும் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.