எலிகளுடன் போராடும் சிறைக்கைதி! - பிரெஞ்சு சிறையின் அவலம்!!

22 ஐப்பசி 2016 சனி 10:30 | பார்வைகள் : 22949
'ச்சே... இந்த நாட்டில் ஒரு திருடனுக்கு மரியாதை இல்லையா?? ஒரு திருடனை இப்படியா நடத்துவது??!' என புலம்ப வைத்துவிட்டார்கள் இந்த பிரெஞ்சு சிறை அதிகாரிகள்! விஷயம் என்னவென்றால் சிறைக்கைதி ஒருவர் தினமும் எலிகளுடன் போராடி வருகிறார்!!
வடக்கு பிரான்சில் உள்ள ஒரு சிறையில், சிறைக்கைதியால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தற்போது 'வைரல்'லாக பரவி வருகிறது. குறித்த காணொளியில் அவரின் சிறைக்குள் எலிகள் அங்கும் இங்கும் ஓடுகிறன. எலிகள் என்றால் எண்ணிக்கையில் ஒன்று இரண்டு இல்ல... முப்பது நாற்பது !!
குறித்த கைதியில் வழக்கறிஞர் Olivier Cardon தெரிவிக்கையில், ' என் கட்சிக்காரர் சிறைக்குள் எலிகளுடன் தான் குடும்பம் நடத்துகிறார். எலிகளுடன் தான் சாப்பிடுகிறார். எலிகளுடன் தான் குளிக்கிறார்!' என ஏகபோகமாய் அரசை கடிந்து தள்ளுகிறார். குளியல் அறைக்கு வரும் தண்ணீர் குழாய்களுக்குள் எலிகள் ஓடித்திரிகிறது என சொல்கிறார் Olivier Cardon.
அதெல்லாம் சரிதான்... ஆனால் கைது கையில் கமரா எப்படி வந்தது என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வார்??
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025