பிக்பாஸ் ஜனனி திருமண நிச்சயதார்த்தம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?
17 சித்திரை 2025 வியாழன் 12:14 | பார்வைகள் : 2756
தமிழ் திரை உலகின் நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான ஜனனி, தனது காதலருடன் நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த நடிகை ஜனனி, பாலா இயக்கிய 'அவன் இவன்' என்ற திரைப்படத்தின் மூலம் முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக 'தெகிடி' என்ற திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
இதனை அடுத்து 'அதே கண்கள்,' 'முப்பரிமாணம்,' 'இப்படிக்கு காதல்' உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மூன்றாவது ரன்னர் அப் இடத்தை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை ஜனனி நீண்ட நாட்களாக காதலித்து வந்த சாய் ரோஷன் சாம் என்பவரை திருமணம் செய்யப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து உள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 11ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறும் என்று இருவீட்டார் தெரிவித்துள்ளனர். ஜனனியை திருமணம் செய்ய போகும் சாய் ரோஷன் சாம் சென்னையை சேர்ந்தவர் என்றாலும், துபாயில் தற்போது அவர் வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் விமானியாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan