சாக்லேட் பார் ஐஸ்கிரீம்

17 சித்திரை 2025 வியாழன் 12:23 | பார்வைகள் : 126
ஐஸ்க்ரீம் வீட்டில் எப்படி செய்வது என நினைத்து பலரும் அதை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் குழந்தைகளோ ஐஸ்க்ரீம் வேண்டுமென்று விடாப்பிடியாக இருப்பார்கள்.
சந்தையில் கிடைக்கும் ஐஸ்கிரீம்கள் ஆரோக்கியமானவை அல்லாததால், அவற்றை சாப்பிட்டு நோய்வாய்ப்படலாம். உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, வீட்டிலேயே ஆரோக்கியமான சாக்கோ பார்களை தயாரிக்கலாம். இது சுவையானதோடு, ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
1 கப் மக்கானா ½ கப் ஊறவைத்த பாதாம்
4 தேக்கரண்டி தேன்
1 கப் பால் பவுடர்
1 கிளாஸ் பால்
4–5 சொட்டு வெண்ணிலா எசன்ஸ்
200 கிராம் டார்க் சாக்லேட் ( Diary milk கூட பயன்படுத்தலாம்)
4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
முதலில், ஒரு கிண்ணத்தில் ஊறவைத்த பாதாம் மற்றும் மக்கானாக்களை பாலில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதில் பால் பவுடர், சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். இந்தக் கலவையை ஐஸ் மோல்டில் மாற்றி 12 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து உறையவைக்கவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் டார்க் சாக்லேட்டை எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடாக்கவும். ஃப்ரீசரில் இருந்து ஐஸ்கிரீமை எடுத்து சாக்லேட்டில் நனைத்து மீண்டும் அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். சாக்லேட் கெட்டியானதும் பரிமாறவும்.
இந்த ஐஸ்கிரீம் ஆரோக்கியமானது, வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பார் ஐஸ்கிரீமில் ரசாயனம் இல்லாததால் யாருக்கும் தீங்கில்லை. இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயனுள்ளன. தாமரை விதைகளில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலுவாக்கும். பாதாம் மூளைக்கு நல்லது. தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பாலில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. டார்க் சாக்லேட்டில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளதால் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. தேங்காய் எண்ணெயில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.