Paristamil Navigation Paristamil advert login

Montparnasse நிலையத்தில் ஒருவர் கைது!!

Montparnasse நிலையத்தில் ஒருவர் கைது!!

17 சித்திரை 2025 வியாழன் 14:36 | பார்வைகள் : 10117


Montparnasse நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணக்கு காட்டப்படாத பெருந்தொகை பணம் அவர் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 14, திங்கட்கிழமை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.  நபர் ஒருவர் €40,000 யூரோக்கள் பணத்துடன் பயணித்த நிலையில், Montparnasse நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த பணத்துக்குரிய கணக்கு எதனையும் வைத்திருக்கவில்லை எனவும், விசாரணைகளுக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சென்ற ஏப்ரல் 11 ஆம் திகதி இதே Montparnasse நிலையத்தில் வைத்து நபர் ஒருவர் €28,000 யூரோக்கள் பணத்துடன் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்