Paristamil Navigation Paristamil advert login

நேரடி ஒளிபரப்பில், பெண்ணின் மார்பில் முத்தமிட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர்!

 நேரடி ஒளிபரப்பில், பெண்ணின் மார்பில் முத்தமிட்ட தொலைக்காட்சி தொகுப்பாளர்!

19 ஐப்பசி 2016 புதன் 10:36 | பார்வைகள் : 21407


கடந்த வாரத்தில் இருந்து பெரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் செய்தி இதுதான். தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஒளிபரப்பாக நிகழ்ச்சி செய்துகொண்டிருந்த தொகுப்பாளர் ஒருவர், ஒரு பெண்ணுக்கு அனுமதி இல்லாமல் அவரின் மார்பில் முத்தம் கொடுத்துவிட்டார். இப்போது அச்செய்தி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 'முத்தம் கொடுப்பதென்றால் மேடைக்கு பின்னால் சென்று கொடுக்கலாம்! அனுமதி இல்லாமல் ஒரு பெண்ணின் மார்பில், அதுவும் நேரடி ஒளிபரப்பில் இப்படி செய்யலாமா?' என சமூகவலைத்தளமான டுவிட்டரில் குறித்த தொகுப்பாளரை துவைத்து தொங்க விடுகிறார்கள்.
 
தொகுப்பாளரின் பெயர் Jean-Michel Maire. இவர் முத்தமிட்ட பெண்ணின் பெயர் Soraya. C8 தொலைக்காட்சியில் Kim Kardashian பரிசில் நகைகளை பறிகொடுத்தார் இல்லையா...?? அது குறித்த நேரடி நிகழ்ச்சி ஒன்றை  35 மணிநேரங்களாக செய்து 'தலைப்புச் செய்தி' ஆனார்கள். ஆனால் அந்த பரபரப்பை விட இது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 
 
விஷயம் பெண்கள் உரிமை அமைச்சர் வரை சென்றுவிட்டது. 'கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தாலும் பெண்ணின் விருப்பம் இல்லாமல் முத்தமிட முடியாது!' என பெண்கள் உரிமை அமைச்சர் Laurence Rossignol டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், 'இது பாலியல் துன்புறுத்தல்!' என இது தொடர்பாக பல கருத்துக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்