ஒரு நாள் வேலைகூட செய்யாமல் 10 வருடங்களாக சம்பளம் வாங்கும் அதிகாரி!
18 ஐப்பசி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18700
என்ன கொடுமை இது என தலையில் அடித்துக்கொள்ள வைக்கும் செய்தி இது. ஒருவர் கடந்த பத்து வருடங்களாக வேலை ஏதுவும் செய்யாமல் அரச சம்பளமாக மாதம் 4000 யூரோக்கள் பெற்று வருகிறார்.
குறித்த 55 வயது நபரின் பெயர் Bosko Herman. இவருக்கு எப்படி வேலையே பார்க்காமல் அரசு சம்பளம் கொடுக்கிறது??
Saint-Savine என ஒரு சிறு கிராமம். அங்கு 2001ஆம் ஆண்டில் இருந்து 2006 ஆம் ஆண்டு வரை ஒரு நகர முதல்வருக்கு ஜெனரல் சேவைகள் அதிகாரியாக பணிபுரிந்தார். பின்னர் என்னாகிவிட்டது, 2006இல் மேயர் தன் பதவியை இழந்ததும், Bosko Hermanக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
ஆனால், அவருக்கு பிறிதொரு இடத்தில் வேலை கிடைக்கும் வரை அவருக்கு அரசு 70 வீத சம்பளத்தை அவருக்கு கொடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் அவருக்கு இன்னும் வேலை கிடைத்தபாடில்லை! 2006 இல் இருந்து 2016 வரை கடந்த பத்து வருடங்களாக 'சும்மா' தான் இருக்கிறார். அவர் சம்பளத்தில் 70 வீதமான 3,700 யூரோ பணம் மாத்திரம் வங்கியில் மாதாமாதம் கிரெடி ஆகிறது.
இன்னும் சில வருடங்களில் இது இன்னும் சில யூரோக்களாக அதிகரிக்கும் எனவும் பின்னர் ஓய்யூதியம் கொடுக்கப்பட்டு ரிட்டயர்மெண்ட் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல அரசாங்கம்!!