Paristamil Navigation Paristamil advert login

இராஜதந்திர வெற்றி!! 

இராஜதந்திர வெற்றி!! 

17 சித்திரை 2025 வியாழன் 21:35 | பார்வைகள் : 858


«பிரான்சிற்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி » என வெளிவிகார அமைச்சர் ஜோன்-நொயல் பரோ தெரிவித்துள்ளார்.

«உக்ரைன் போர் தொடர்பாக பரிசில் அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வைத்தமை பெரும் இராஜதந்திர வெற்றி » என இவர் குறிப்பிட்டுள்ளார்.

«பரிசில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து, ரஸ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையில் நிரந்தரமானதும் உறுதியானதுமான ஒரு அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பும் கலந்துறையாடலும் நடாத்தப்பட்டது»

«அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் ஒன்றிணைத்து செயற்பட வைக்கப் பெரும் முயற்சி தேவைப்பட்டது. அதில் நாம் பெரும் வெற்றி அடைந்துள்ளளோம்»

என வெளிவிகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்