ஜனாதிபதித் தேர்தலுக்காக இடதுசாரிகளை ஒன்றிணைக்க விரும்பும் சூழலியலாளர் Marine Tondelier?

17 சித்திரை 2025 வியாழன் 21:42 | பார்வைகள் : 758
சூழலியலாளர் (Écologistes) மாரின் டாண்டெலியர் 2027 ஜனாதிபதித் தேர்தலுக்காக இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முன்னிலை வகிக்கிறார். இந்த நோக்கில், அவர் "gagnons-ensemble.fr" என்ற இணையதளத்தைத் தொடங்கி, இடதுசாரி மற்றும் சுற்றுச்சூழல் கட்சிகளின் கூட்டணியை உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார்.
தனிநபர் வேட்பாளர் குறித்து பேசாமல், பொதுவான கொள்கைகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒருங்கிணைந்த வேட்பாளராக ஒரு பெண்ணை முன்வைக்க வேண்டும் என்றும் இது அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும் கூறியுள்ளார்.
இடதுசாரி கட்சிகளின் முன்னாள் வேட்பாளர் மெலன்சனின் ஆதிக்கம் குறைந்து வரும் நிலையில் இவர் தன்னை வேட்பாளராக நிலை நிறுத்த முயல்கிறாரா?....