Paristamil Navigation Paristamil advert login

தவளைக் கால் சாப்பிடலாம் வாருங்கள்!

 தவளைக் கால் சாப்பிடலாம் வாருங்கள்!

14 ஐப்பசி 2016 வெள்ளி 10:30 | பார்வைகள் : 19448


அட... ரொம்பத்தான் முகம் சுழிக்காதீங்க... பிரெஞ்சு உணவுகளில் நத்தை எவ்வளவு பிரபல்யமோ... அதே அளவு தவளைகளும் பிரபலம்! 
 
தவளை என்பதை விட, தவளைக் கால்கள் தான் மிக பிடித்தமான உணவு என்று சொல்லப்படுகிறது. தவளைக் கால் சூப் ஆகட்டும், இல்லை 'சிக்கன் லாலிபாப்' மாதிரி பொரித்த தவளை கால்கள் ஆகட்டும் அதற்கென ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. பரிசில் உள்ள  bar de grenouilles உணவகம் இந்த தவளை கால்களால் ஆன உணவுகளுக்கு மிகவும் பெயர் போனது. 
 
அண்ணளவாக வருடத்துக்கு 80 மில்லியன் அவளைகளை தின்று தீர்க்கிறார்களாம் பிரெஞ்சு மக்கள். அதாவது 160 மில்லியன் தவளைக் கால்கள்! எண்ணிக்கையில் பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.! 
 
தவளைகள் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. முதல் நாள் இரவில் வேட்டையாடப்பட்டு, பின்னர் 'விஷப்பை' போன்ற சில தேவையில்லாத பாகங்களை வெட்டி வீசிவிட்டு 'ஐஸ்' போட்டு பிரான்சுக்கு அனுப்புகிறார்கள். பிரான்சில் விற்பனைக்காக தவளைகள் வேட்டையாடப்படுவதை பிரெஞ்சு அரசு 80 ஆண்டு முதலே தடை செய்திருந்தது. அதற்காக 10,000 யூரோக்கள் வரை குற்றப்பணமும் உண்டு.
 
12ஆம் நூற்றாண்டில் இருந்து பிரான்ஸ் தவளைகளுக்கு அடிமையாக உள்ளது என சொல்கிறது ஒரு ஆய்வு!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்