சோளக்காட்டுக்கு நடுவே கஞ்சா பயிர்!
13 ஐப்பசி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 19228
களவாணித்தனத்தில் இது உச்சக்கட்டம் என சொல்லலாம்! ஏக்கர் கணக்கில் விளைந்து நிற்கும் சோளக்காட்டுக்கு நடுவே கஞ்சா பயிரிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
சாதாரணமாக அவ்வளவு பெரிய வயலில் யாரும் உள் நுழைய மாட்டார்கள் என்பதாலும்... தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியாது என்பதாலும்... கஞ்சா பயிரை சோள வயலுக்குள் நட்டுள்ளனர். ஆனால் சிக்கல் என்னவென்றால்... உலங்கூர்தியில் (ஹெலிகாப்டர்) பறந்த சில அதிகாரிகள் கண்களுக்கு இந்த கஞ்சா செடி பச்சை நிற கோடாக தெரிந்துள்ளது. மொத்த வயலும் மஞ்சள் நிறத்தில் இருக்க, பென்சிலால் வரைந்தது போல் பச்சை கோடு இருந்தால் சந்தேகம் வருமா இல்லையா? காவல்துறையினரை விட்டு விசாரித்து பார்த்தால்... அது கஞ்சா!
Buzet-sur-Baise எனும் சிறிய கிராமத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 250 கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளனர். பிறகென்ன... கஞ்சா பயிரிட்டவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தினுசு தினுசா திருட்டுத்தனம் பண்ணுறாங்கப்பா!