Netflix சந்தா விலை உயர்வு: ஏப்ரல் முதல் புதிய கட்டணங்கள் அறிவிப்பு!

18 சித்திரை 2025 வெள்ளி 11:45 | பார்வைகள் : 373
Netflix நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் பிரான்ஸில் தனது அனைத்து சந்தா கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது. விளம்பரத்துடன் கூடிய Le forfait standard 5.99 யூரோவிலிருந்து 7.99 யூரோவாக (33%) உயர்ந்துள்ளது.
விளம்பரமில்லாத Le forfait standard 13.49 யூரோவிலிருந்து 14.99 யூரோவாக (11%) அதிகரித்துள்ளது. l’abonnement premium பயன்படுத்துவோருக்கு மாதந்தோறும் 2 யூரோ அதிகம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 21.99 யூரோ ஆகும். (10% அதிகரிப்பு).
இந்த கட்டண உயர்வு பிரான்சுக்கு மட்டுமல்லாமல் ஜனவரி மாதத்திலேயே அமெரிக்கா, கனடா மற்றும் போர்த்துக்கல் போன்ற நாடுகளிலும் Netflix இதேபோல் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
Netflix நிறுவனத்தின் விளக்கத்தின்படி, அதிகமான உள்ளடக்கங்களை வழங்கும் நோக்கில், கட்டண திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
விளம்பரத்துடன் கூடிய திட்டங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவையை வழங்கும் வாய்ப்பையும், நிறுவனத்துக்கு கூடுதல் வருமானத்தையும் தருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.