பரிசில் விசவாயு தாக்குதல் : சிகிச்சை பலனின்றி இரண்டாவது நபரும் பலி!!
18 சித்திரை 2025 வெள்ளி 12:06 | பார்வைகள் : 3812
பரிசில் விஷவாயு தாக்கி பெண் ஒருவர் பலியான நிலையில், நான்கு நாட்களின் பின்னர் இரண்டாவது நபரும் பலியாகியுள்ளார்.
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள சிகிச்சை நிலையம் ஒன்றில் கிரையோதெரப்பி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இரு நபர்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியிருந்தனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை காலை இரண்டாவது நபரும் பலியாகியுள்ளார்.
திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த அசம்பாவிதத்தில் 34 வயதுடைய பெண் ஒருவர் (சிகிச்சை நிலைய ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது) உயிரிழந்திருந்தார். இரண்டாவது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan