அகதிகளுக்காக உணவு - பேஸ்புக்கில் வைரல் ஆகும் காணொளி!!
12 ஐப்பசி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 19137
சமூகவலைத்தளங்கள் ஊடாக இத்தகைய நல்ல விஷயங்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. ஒரு வாகன சாரதி, பரிசின் புறநகர் பகுதியில் வசிப்பவர். பெயர் Malik Diallo. அவர் தன் நண்பர்களுக்கு பேஸ்புக் ஊடாக அழைப்பு விடுத்திருந்தார். 'நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமைக்கவேண்டும்!' என்பதே அந்த அழைப்பு.
திரண்டு வந்த நண்பர்கள், விறு விறுவென 150 பேருக்கு அளவான சாப்பாடு தயார் செய்தார்கள். பின்னர் அதை கடதாசி பொதி செய்து... அதை ஒரு பெட்டிக்குள் வைத்து... அதை 'சீல்ட்' செய்து... மேற்குறித்த நபரின் வாகனத்தில் வைத்து... நேரே பரிசின் 18 ஆம் வட்டாரத்திற்கு வந்துவிட்டார்கள். அங்கே பசியுடன் இருந்த அகதிகளுக்கு அவற்றை வழங்கினார்கள்.
இவை அனைத்தையும் ஒரு நிமிட வீடியோவாக சுருக்கி, முகநூலில் பதிவேற்றியுள்ளார் Malik Diallo. இப்போது அந்த வீடியோ பரபரப்பாக 'ஹிட்' அடித்து வருகிறது. 100,000 பார்வைகள், 500க்கும் மேற்பட்ட பகிர்வுகள் என அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது குறித்த வீடியோ. 'இது பணம் சம்பாதிக்கவோ.. பெருமை தேடிக்கொள்ளவோ செய்யப்பட்டதல்ல... மன திருப்த்திக்காக.. சந்தோசத்துக்காக செய்யப்பட்டது!' என மீடியாக்களுக்கு அண்ணர் பேட்டி பேட்டியாக வழங்கி தள்ளுகிறார். வாழ்த்துக்கள் மேன்!!