புகைப்பிடிக்காத நவம்பர்! - போட்டிக்கு தயாரா?

8 ஐப்பசி 2016 சனி 10:30 | பார்வைகள் : 22492
நீங்கள் புகைப்பிடிப்பவரா? வரும் நவம்பர் மாதம் முழுவதும் நீங்கள் புகைப்பிடிக்க கூடாது. சவாலுக்கு தயாரா... என அழைக்கிறது பிரெஞ்சு அரசு. மக்களிடம் அதிகரித்து வரும் புகைப்பழக்கத்தை குறைப்பதற்கோ... நிறுத்துவதற்கோ படாத பாடெல்லாம் படுகிறது பிரெஞ்சு அரசு. அதற்காகவே இந்த சவால்.
"Moi(s) sans tabac" எனும் தலைப்பில் ( சிகரெட் இல்லாமல் நான்!) இந்த நவம்பர் மாதத்தை நீங்கள் சிகரெட் புகைக்காமல் கடந்தால்... அதன் பின்னர் நிரந்தரமாகவே சிகரெட்டை தூக்கிப்போட்டு விடுவீர்கள் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் புகைப்பிடிக்கிறார்கள். இது மிக ஆபத்தான் செயலாகும். இவை எல்லாவற்றையும் முடிந்தளவு குறைக்கவே இந்த நவம்பரில் "Moi(s) sans tabac" அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. என்ன மக்களே... சவாலுக்கு தயாரா?
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025