1.2 பில்லியன் வருவாயை ஈட்டும் - பரிஸ் Fashion Week.

6 ஐப்பசி 2016 வியாழன் 10:30 | பார்வைகள் : 23304
பரிசில் நடைபெற இருக்கும் 300 வெவ்வேறு Fashion Show நிகழ்ச்சி மூலம், 1.2 பில்லியன் வருவாய் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
French Fashion Institute (IFM) எடுத்திருந்த கணக்கெடுப்பிலேயே இது தெரியவந்துள்ளது. ஒரு வாரத்தில் இடம்பெறும் 300 நடை மேடை (runway) நிகழ்ச்சி மூலம் 1.2 பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் ஈட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போல் வருடத்தில் இடம்பெற இருக்கும் வெவ்வேறு 6 Fashion Week நிகழ்ச்சி மூலம் மொத்தம் 10.3 பில்லியன் யூரோக்கள் வருவாயை பிரெஞ்சு அரசு பெற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
பரிசில் இடம்பெறும் Fashion நிகழ்ச்சிகள், அரசுக்கு எப்போதும் பெரும் வருவாயை ஏற்படுத்தி தருவதாகும். வருடத்துக்கு 150 பில்லியன் யூரோக்கள் பண சுழற்சியும், ஒரு மில்லியன் பேர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதிசெய்துள்ள மிகப்பெரிய வேலைத்தளமாகும். அதை தொடர்ந்து விமான தயாரிப்புக்கள் நிறுவனமும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இருக்கின்றன. மேலும் பரிஸ் Fashion நிகழ்ச்சிக்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய பண சுழற்சி கொண்ட தொழில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025