மோனலிசா புன்னகைக்கு தடை! - புதிய சட்டம்!
2 ஐப்பசி 2016 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 19190
தலையை பிய்த்துக்கொள்ள வைக்கும் தலைப்பாக இருந்தாலும்..., அதுதான் உண்மை... பிரான்சில் இனிமேல் மோனலிசா புன்னகைக்கு தடை!!
அட... பதறாமல் மேற்கொண்டு படியுங்கள்! நம் நாட்டு குடிமக்கள் பல வித அடையாள அட்டைகளை ( ID ) வைத்துள்ளார்கள் அல்லவா? அப்படியான அடையாள அட்டைகளில் நீங்கள் இனிமேல் மோனலிசா புன்னகைப்பது போல் மெல்லிய புன்னகை வீசி 'போஸ்' கொடுக்க முடியாது! மிலிட்டரிக்கு ஆள் எடுப்பதுபோல் ஸ்ட்ரிக்ட்'டாகத்தான் போஸ் கொடுக்க வேண்டும். மேற்படி தீர்ப்பை பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.
நபர் ஒருவர் அடையாள அட்டை ஒன்றுக்காக புகைப்படம் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் 'இப்புகைப்படத்தில் நீங்கள் சிரித்துக்கொண்டு உள்ளீர்கள்!' என காரணம் காட்டி... அடையாள அட்டையை அதிகாரிகள் 'ரிஜெக்ட்' செய்துவிட்டார்கள். கோபம் கொண்ட குறித்த நபர்... நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு பதிந்துள்ளார். ஆனால் தீர்ப்பு வேறு விதமாக திரும்பிவிட்டது. 'நாட்டாம தம்பி பசுபதி.. இனிமே நீ எந்த போட்டோவுலயும் சிரிக்கப்படாது!' என தீர்ப்பளித்துள்ளது.
'பிரெஞ்சு மக்கள் இனிமேல் சிரிப்பை மறக்கவேண்டும் போல்!' என நொந்துபோய் உள்ளார் குறித்த நபருக்காக வாதாடிய வழக்கறிஞர்.