ஓய்வூதிய சலுகை ரத்து? 84 லட்சம் பேர் பாதிப்பு!!

19 சித்திரை 2025 சனி 20:22 | பார்வைகள் : 6264
நிதிச்செலவுகள் அமைச்சர் Amélie de Montchalin, ஓய்வூதியர்களுக்கான 10% வரிச்சலுகையை நீக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “உங்கள் வரிப்பங்களிப்பை நிர்ணயிக்க வேண்டியது வயது அல்ல; உங்கள் செயல்திறன் தான்"என அவர் கூறினார்.
1978ம் ஆண்டு அறிமுகமான இந்தச் சலுகை, தற்போது அரசுக்கு வருடத்திற்கு 4.5 பில்லியன் யூரோ இழப்பை ஏற்படுத்துகிறது. Medef அமைப்பும், ஓய்வூதிய தொழிலாளர்களுக்கான செலவுக் கழிவைப் பெறுவது “அபத்தமானது” என கண்டித்துள்ளது.
இந்த சலுகை ரத்து செய்யப்பட்டால், சுமார் 84 லட்சம் ஓய்வூதியர்கள் அதிக வரி செலுத்த நேரிடும் என UNSA-Retraités எச்சரித்துள்ளது. பலர் வருமானம் இல்லாமல் உள்ளதால், சமூக விரோத முடிவாக இது அமையும் என கூறப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025