16 வயதுச் சிறுவனிற்கு பல கத்திக்குத்துகள்!!!

19 சித்திரை 2025 சனி 22:03 | பார்வைகள் : 203
16 வயதுடைய பதின்ம வயதினர் ஒருவர் பல கத்திக்குத்துகளிற்கு இலக்காகி உள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 2h20 அளவில் குழுமோதல் நடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவற்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நீஸ் நகரிலுள்ள rue Fenoglio de Briga இல் நடந்துள்ளது.
காவற்துறையினர் வந்த பொழுது, அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்ட சிற்றுந்தைக் காவற்துறையினர மடக்கியபோது, அந்த சிற்றுந்தின் பின்னிருக்கையில் இரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த இந்த 16 வயதுடைய பதின்ம வயதினனை உடனடியான வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு, வாகனத்திற்குள் இருந்த மற்றைய மூவரையும் கைது செய்துள்ளனர்.
விசாரணகளின் பின்னரே மேலதிகத் தகவல்கள் கிடைக்கப்பெறும்.